ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!
Author
gowtham
Date Published

இஸ்ரேல் :ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான முடிவை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று (ஜூன் 19) அறிவித்தது.
அதன்படி, இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள தூதரகத்தின் இணையதளத்தில் இந்தியர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. போர் சூழல் காரணமாக இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஈரானை தொடர்ந்து ஈரானை மத்திய அரசின் ஆபரேஷன் சிந்து மீட்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் நாட்டிலும் தொடங்கியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தில் பதிவு செய்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24/7 கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள்: +972 54-7520711; +972 54-3278392 மற்றும் மின்னஞ்சல்: [email protected]." என்ற இமெயில் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
unknown nodeஇதனிடையே, இன்றைய தினம் ஈரானில் இருந்து முதற்கட்டமாக 110 இந்திய மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் அனைவரும் வியாழக்கிழமை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
இந்த மாணவர்களில் 90 பேர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஒரு தகவலின்படி, 13,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தற்போது ஈரானில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மருத்துவப் படிப்பைத் தொடர ஈரானுக்குச் சென்றிருந்தனர்.
ஈரானில் இருந்து அதிகபட்ச இந்தியர்களை வெளியேற்ற துர்க்மெனிஸ்தான் வழியாக விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்திய குடிமக்களுக்காக வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.