Payload Logo
தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!

Author

gowtham

Date Published

Corona Virus TN

விழுப்புரம் :கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழலில் கொரோனா தொற்று பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரப்பேரி கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர், ஹைதராபாத்தில் கட்டுமான ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது கொரோனா தொற்று உறுதியான நிலையில், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இறுதியில், இன்று தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பலி 5 ஆக அதிகரித்துள்ளது. துயர இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கொரோனா தொற்றின் தீவிரத்தை மீண்டும் உணர்த்தியுள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது,.