இஸ்ரேல் – ஈரான் இடையே முற்றும் போர் பதற்றம்.! பற்றி எரியும் எண்ணெய்க் கிடங்கு.!
Author
gowtham
Date Published

இஸ்ரேல் :இஸ்ரேல் - ஈரான் இடையே பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 329 பேர் காயமடைந்துள்ளனர்.
நள்ளிரவுக்கு பின் வான் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியது. ஈரானின் அணு ஆயத திட்டங்களுக்கு தொடர்புடைய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதில் ஈரானின் IRGC படைத்தளபதி உசைன் சலாமி, முக்கிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகவும், பல அணு ஆய்வு மையங்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது 150-க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்கியது ஈரான். அதன்படி, ஈரான் நடத்திய தாக்குதலில் குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரான் ஏவிய ஏவுகணைகளால் இஸ்ரேலில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வான் தாக்குதல் காரணமாக சைரன் எச்சரிக்கை ஒலித்தபடியே இருந்ததால் இஸ்ரேல் மக்கள் பீதியடைந்தனர். ஆனால், பெரும்பாலான ஏவுகணைகள் வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இவ்வாறு, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. இதில் ஈரானின் ஷஹரன் எண்ணெய் கிடங்கு வெடித்துச் சிதறி பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் மீதான இஸ்ரேலின் முதல் தாக்குதலாக இது இருக்கும்.
unknown nodeதெற்கு பார்ஸின் 14வது கட்டத்தின் நான்கு அலகுகளில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதால், 12 மில்லியன் கன மீட்டர் எரிவாயு உற்பத்தி நிறுத்தப்பட்டதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் கூறியுள்ளது. ஈரான் ஆண்டுக்கு சுமார் 275 பில்லியன் கன மீட்டர் (bcm) எரிவாயுவை உற்பத்தி செய்கிறது, இது உலகளாவிய எரிவாயு உற்பத்தியில் சுமார் 6.5% ஆகும். மேலும் பொருளாதாரத் தடைகள் காரணமாக எரிவாயுவை ஏற்றுமதி செய்ய முடியாததால் உள்நாட்டில் அதைப் பயன்படுத்துகிறது.