Payload Logo
கிரிக்கெட்

"அயோ முடியல சீக்கிரம் வாங்க"..விரலில் பட்ட பந்து வலியால் துடித்த ஸ்டீவ் ஸ்மித்!

Author

bala

Date Published

smith

லண்டன் :உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல்  லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள்  மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி  எடுத்திருந்தது.

அடுத்ததாக தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய  தென்னாப்பிரிக்கா மிகவும் தடுமாறியது என்று சொல்லலாம். ஏனென்றால், 57.1  ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக ஆஸி அணி 74 ரன்கள் முன்னிலையில் இருந்தது. அதன்பின், இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எனவே, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்    தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி கொண்டு இருக்கிறது.

இப்படியான சூழலில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் கையில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

ஏனெனில் ஸ்மித் அவர்களின் மிக முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர். ஆஸி அணியின் பேட்டிங் இன்னிங்ஸ் முடிந்தாலும் அவர் சிறந்த ஒரு பில்டர் எனவே, அவர் காயம் ஏற்பட்டது பின்னடைவாகதான் பார்க்கப்படுகிறது. காயம் ஏற்பட்டபோது அவர் புலம்பியபடி மைதானத்தை விட்டு வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த காயத்தின் தன்மை குறித்து  தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், அது அவரது விரலில் ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. வீடியோவை வைத்து பார்க்கையில் பந்து அவரது விரல்களில் பட்டுள்ளதால் அவர் வலியால் துடித்தார். மருத்துவக் குழு உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியது, மேலும் அவரது மைதானத்திற்கு திரும்பும் வாய்ப்பு குறித்து பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.