"எதுவுமே வேலை செய்யல " ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
Author
bala
Date Published

குஜராத் :அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி இன்னும் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்…எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதற்கான எந்த விவரமும் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
ஏர் இந்தியா கொடுத்த தகவலின் படி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் இன்று புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை உறுதிப்படுத்தியிருந்தது. மொத்தமாக 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர் எனவும் இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்கள் எனவும் விளக்கம் அளித்திருந்தது.
இந்த கோர விபத்து சம்பவம் இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், விமானம் விபத்து ஆவதற்கு முன்பு அதில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விபத்தான அந்த ஏர் இந்தியா விமானம் சரியில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். விபத்துக்குள்ளான இந்த விமானமானது 2 மணி நேரத்திற்கு முன்பு டெல்லியில் இருந்து அகமதாபாத்தை அடைந்தது.
அப்போது அதில் பயணம் செய்த ஆகாஷ் வத்சா என்ற பயணி விமானம் வழக்கமாக இருப்பது போல இல்லாமல் அசௌகரிகமாக இருந்ததாக தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார். ஏனென்றால், விமானத்திற்கு அவர் பயணம் செய்யும் போது அங்கிருந்த ஏசியை முதலில் போட்டு பார்த்திருக்கிறார். அதுவும் வேலை செய்யவில்லை அதன்பிறகு டச் டிவி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதையும் உபயோகம் செய்து பார்த்திருக்கிறார் அதுவும் வேலை செய்யவில்லை.
அடுத்ததாக கீழே ஒரு ரிமோர்ட் இருந்தது அதனையும் எடுத்து லைட் சரியாக வேலை செய்கிறதா என பார்த்திருக்கிறார் ஆனால், அதுவும் வேலை செய்யவில்லை இதனால் மிகவும் கடுப்பான அந்த பயணி அதனை வீடியோவாக பதிவு செய்து விபத்து சம்பவம் நடந்த பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த பலரும் விமானத்தில் இன்னும் வேறு பிரச்சினைகள் இருந்ததா? என்கிற வகையில் கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.
மேலும், இன்னும் இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. விபத்து குறித்து விசாரணையை தொடங்க சம்பவ இடத்திற்கு புலனாய்வு பிரிவு சென்று விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணை முடிந்த பிறகு என்ன காரணத்துக்காக விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விளக்கம் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node