Payload Logo
செஸ்

நார்வே செஸ் தொடர் : அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய குகேஷ்!

Author

bala

Date Published

arjun erigaisi vs gukesh

நார்வே :செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை ஆறாவது சுற்றில் (ஜூன் 2, 2025) முதல் முறையாக கிளாசிக்கல் செஸ்ஸில் வீழ்த்தினார். கார்ல்சன் உலகின் தலைசிறந்த வீரர் அவரையே குகேஷ் 3-0னு என்ற கணக்கில் தோற்கடித்தது பெரிய வெற்றியாக அமைந்தது. எனவே, நேற்றிலிருந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அந்த வெற்றியை தொடர்ந்து குகேஷ் ஏழாவது சுற்றில் மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்டார். முன்னதாக, இரண்டாவது சுற்றில் அர்ஜுன் குகேஷை வீழ்த்தியிருந்தார், ஆனால் இந்த முறை குகேஷ் தனது சிறப்பான உத்திகளை மெருகேற்றி, அர்ஜுனுக்கு எதிராக முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பெற்றார்.

இந்த ஆட்டத்தில் குகேஷுக்கு வெள்ளை காய்கள் கிடைத்தது. அதாவது முதல் நகர்வு செய்யும் வாய்ப்பு. இது ஒரு சின்ன நன்மை, ஏன்னா முதலில் ஆடுறவர் ஆட்டத்தை கொஞ்சம் கட்டுப்படுத்த முடியும். குகேஷ் ஒரு பக்கா தொடக்க உத்தியை (opening strategy) தேர்ந்தெடுத்தார், இது அர்ஜுனோட ஆக்ரோஷமான பாணிக்கு எதிரா நல்லா வேலை செய்யும். அர்ஜுன் வழக்கமா தாக்குதல் மற்றும் பாதுகாப்பு கலந்து ஆடுவார், ஆனா குகேஷ் இந்த முறை ஆட்டத்தை தன்னோட கட்டுப்பாட்டுல வைத்திருந்தார்.

ஆட்டத்தின் ஆரம்பமும் நடுக்கட்டமும் (middlegame) ரொம்ப முக்கியம். எனவே,  குகேஷ் தன்னோட காய்களை (பawns, knights, bishops) ஒருங்கிணைந்து சாமர்த்தியமா நகர்த்தினார். அர்ஜுனுக்கு அழுத்தம் கொடுக்குற மாதிரி, கவனமா ஆடினார் என்று கூட சொல்லலாம். அர்ஜுன் தன்னோட வழக்கமான தாக்குதல் பாணியில் சில எதிர்-நகர்வுகளை முயற்சி பண்ணார், ஆனா குகேஷ் அவர் திட்டத்தை புரிஞ்சு, ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்து வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியால குகேஷுக்கு 3 புள்ளிகள் கிடைச்சுது, இதனால அவர் மொத்தம் 11.5 புள்ளிகளோட புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். அர்ஜுனுக்கு இந்த தோல்வி ஒரு பின்னடைவு, ஆனா அவர் 7.5 புள்ளிகளோட ஐந்தாவது இடத்தை பிடித்தார். தொடர்ச்சியாக வெற்றிபெற்று வரும் குகேஷிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதனை தொடர்ந்து எட்டாவது சுற்றில், டி. குகேஷ் சீனாவின் வெய் யி (Wei Yi)யை எதிர்கொள்கிறார்.புள்ளி விவரங்கள் (ஏழாவது சுற்று வரை):