Payload Logo
இந்தியா

11 பேர் உயிரிழந்த விவகாரம்: 'கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்' - உயர் நீதிமன்றம்!

Author

gowtham

Date Published

Karnataka State Cricket Association

பெங்களூரு :சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு உத்தரவு வரும் வரை  KSCA நிர்வாகிகள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அமமாநில காவல்துறைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) தலைவர் ரகுராம் பட், செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ். ஜெயராம் ஆகியோர் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர். கிருஷ்ண குமார், கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கினார்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் அசோக் ஹரனஹள்ளி மற்றும் ஷியாம் சுந்தர் ஆஜரானனர், அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் சஷி கிரண் ஷெட்டி ஆஜரானனர். இந்த வழக்கு விசாரணையில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) நிர்வாகிகள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் கூடிய இடைக்கால நிவாரணம் வழங்கியது.

அதே நேரத்தில்,'மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பை விட்டு வெளியேறக்கூடாது. என்றும் அணைத்து விதமான  விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை அடுத்தகட்ட விசாரணை ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் நிகில் சோசலே தாக்கல் செய்த தனி மனுவையும் விசாரித்த நீதிமன்றம், வழக்கை ஜூன் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைகப்பட்டுள்ளது.