"இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி - தவறான செய்தி" நிதின் கட்கரி விளக்கம்.!
Author
gowtham
Date Published

டெல்லி :இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15, 2025 முதல் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் இரு சக்கர வாகனங்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்க NHAI திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி தொடங்கியது.
இதனை தொடர்ந்து, அந்த தகவல் பொதுமக்களிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இதை தெளிவுபடுத்தி, அந்த தகவல் முற்றிலும் தவறானவை என்று கூறினார்.
இது தொடர்பாக நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில், "சில ஊடகங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிப்பது குறித்து தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் முன்மொழியப்படவில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விலக்கு முழு வீச்சில் தொடரும். பரபரப்பை ஏற்படுத்த உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் தவறான செய்திகளைப் பரப்புவது ஆரோக்கியமான பத்திரிகையின் அடையாளம் அல்ல. நான் அதைக் கண்டிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
unknown nodeஇதற்கிடையில், இந்த அறிக்கைகள் தொடர்பாக NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், "இந்திய அரசு இரு சக்கர வாகனங்களுக்கு பயனர் கட்டணத்தை விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களின் சில பகுதிகளில் செய்திகள் வந்துள்ளன. அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெளிவுபடுத்த விரும்புகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளது.
unknown node