Payload Logo
உலகம்

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

Author

gowtham

Date Published

Nehal Modi

அமெரிக்கா :பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அமெரிக்க நிர்வாகமே இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாம். அமெரிக்க நீதித்துறை வழங்கிய தகவலின்படி, தப்பியோடிய பொருளாதார குற்றவாளி நிரவ் மோடியின் சகோதரர் ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) இணைந்து செய்த நாடுகடத்தல் கோரிக்கைக்குப் பிறகு, இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.13,000 கோடி மோசடி வழக்கில் நிஹால் (46 வயது) ஒரு குற்றவாளி. அதன் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் பிரிவு 3 இன் கீழ் பணமோசடி செய்தல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120-B (குற்றவியல் சதி) மற்றும் 201 (தப்பியோடியது) ஆகியவற்றின் கீழ் குற்றவியல் சதி ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் அமெரிக்க வழக்கறிஞர்களால் நாடு கடத்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே, கடந்த 2019-ம் ஆண்டு நீரவ் மோடி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இப்பொழுது, சிபிஐ, ED கோரிக்கையை ஏற்று நேஹல் மோடியை கைது செய்து அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.