Payload Logo
இந்தியா

ஹனிமூன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! வசமாக சிக்கிய புதுப்பெண்.., பின்னணி என்ன?

Author

gowtham

Date Published

Indore tourist murder case

மேகாலயா :இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணமான 9 நாட்களுக்குப் பிறகு, மே 20 அன்று ஹனிமூனுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிற்கு பயணம் மேற்கொண்டனர்.

மே 22 அன்று அவர்கள் ஷில்லாங் நகரை அடைந்தனர். பின்னர், வாடகைக்குக் சைக்கில் எடுத்து கொண்டு வெளியே சுற்றி பார்க்க சென்றனர். ஆனால், மே 23 ஆம் தேதிக்குப் பிறகு இருவரும் மாயமானார்கள். அவர்களை கடைசியாக ஷில்லாங்கில் உள்ள நோங்ரியாட் கிராமத்தில் பார்த்ததாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து, ஜூன் 2 அன்று, ராஜா ராகுவன்ஷியின் சடலம் மேகாலயாவில் உள்ள வெய்சாவ்டாங் நீர்வீழ்ச்சி அருகே ஒரு பள்ளத்தாக்கில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, அவரது மனைவி சோனம் ராகுவன்ஷி தொடர்ந்து மாயமாகவே இருந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. முதலில் அவரது மனைவியை யாரெனினும் கடத்தி சென்றதாக கோணத்தில் போலீசார் தேடி வந்தனர்.

இருப்பினும், ஷில்லாங் காவல்துறையினரிடமிருந்து வெளிப்படைத்தன்மை இல்லாததை விமர்சித்து, சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னர், சோனம், 10 நாட்களுக்கும் மேலாக மாயமாக இருந்த பிறகு, இன்று (ஜூன் 9) உத்தர பிரதேசத்தின் காசிபூர் பகுதியில் உள்ள வாரணாசி-காசிபூர் பிரதான சாலையில் அமைந்துள்ள "காஷி தபா" என்ற உணவகத்தில் சோனம் ராகுவன்ஷி கண்டுபிடிக்கப்பட்டார்.

பின்னர், அந்த கடை உரிமையாளர் சாகில் யாதவின் கூற்றுப்படி, ஜூன் 8 இரவு சுமார் 1 மணியளவில் சோனம் அங்கு வந்து, அழுதபடி தனது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அவருக்கு தொலைபேசியை வழங்கியபோது, அவர் தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அழுததாகவும், பின்னர் தொலைபேசியை திருப்பி கொடுத்ததாகவும் சாகில் தெரிவித்தார்.

சோனம் தனது குடும்பத்தினரை அதிகாலை 3 மணியளவில் தொடர்பு கொண்டு, தான் காஷி தபாவில் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் மத்தியப் பிரதேச காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், இதனை அடுத்து, காசிபூர் காவல்துறையினர் அங்கு சென்று அவரை மீட்டனர். முதலில், அவர் சதார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

இது எல்லாம் முடிந்த பின் இந்த கொலை வழக்கு ஒரு புதிய திருப்பத்தை அடைந்தது, ஏனெனில் சோனம் ராகுவன்ஷி தனது கணவர் ராஜாவை கொலை செய்ய மூன்று பேரை கூலிக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் காசிபூர் காவல்துறையிடம் சரணடைந்ததாகவும், இந்த வழக்கில் அவருடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கைது செய்யப்பட்ட நபர்கள் லலித்பூரைச் சேர்ந்த ஆகாஷ் ராஜ்புத், இந்தூரைச் சேர்ந்த விஷால் சவுகான் மற்றும் இந்தூரைச் சேர்ந்த ராஜ் குஷ்வாஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நான்காவது ஆளாக, மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் மற்றொருவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர் யார் என்று சோனமிடம் விசாரிக்கையில், ஆனந்த் என்று அடையாளம் காணப்பட்ட அவர், சோனம் உடைய காதலன் என்று தெரிய வந்துள்ளது.

ஆனந்த் என்பவரை காதலித்து வந்த போது, தன்னுடைய சம்மதம் இல்லாமல், திடீரென திருமணம் செய்து வைத்ததால், சோனதுக்கும்காதலனுக்கும் இடையூறாக இருந்த ராஜா ராகுவன்ஷியை (புதியதாக திருமணம்) திமிட்டு கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது, அனைவரிடமும் தீவிர  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.