Payload Logo
தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

Author

bala

Date Published

cm mk stalin

சென்னை :2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக, பணம் பெற்றுக்கொண்டு மதிப்பெண்களை மாற்றியமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு மாணவருக்கு மதிப்பெண்களை மாற்றுவதற்கு 90 லட்சம் ரூபாய் வரை கோரப்பட்டதாகவும், பணம் செலுத்தினால் மதிப்பு மாற்றப்பட்ட மதிப்பெண்கள் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கில் சந்தீப் ஷா (Sandeep Shah) மற்றும் சலிம் படேல் (Salim Patel) என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு குறைகாக்கப்பட்டவரை CBI தேடி வருகிறது.

இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களையும் தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில், இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது " தரம், தரம் என்றார்கள்! #NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.

நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை" எனவும் முதல்வர் ஸ்டாலின் மிகவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.

unknown node