Payload Logo
இந்தியா

NEET Exam 2025 : நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியானது!

Author

bala

Date Published

neet exam results

டெல்லி  :நீட் UG 2025 தேர்வு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஒரே பிரிவில் (single shift) நடத்தப்பட்டது. மொத்தமாக 22.7 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு இந்தியாவில் 557 நகரங்களில் உள்ள 4,750 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நடைபெற்றது.

இளநிலை மருத்துவப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்த நிலையில், இன்று வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமானஎன்ற இணையத்தளம் மூலம் சென்று பார்த்து கொள்ளலாம்.  முடிவுகளைப் பார்க்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் (Application Number), பிறந்த தேதி (Date of Birth), மற்றும் பாதுகாப்பு குறியீடு (Security Pin) ஆகியவற்றைப் பயன்படுத்தி பார்த்து கொள்ளலாம்.

இந்த முடிவுகளுடன், இறுதி விடைக்குறிப்பு (Final Answer Key) மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் (Cutoff Marks) ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் ஸ்கோர்கார்டை (Scorecard) பதிவிறக்கம் செய்து, அடுத்த கட்டமாக கவுன்சலிங் செயல்முறைக்கு (Counselling Process) தயாராக வேண்டும். மேலும், கவுன்சலிங் வரும் ஆகஸ்ட் மாதம்  முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.