Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!
Author
gowtham
Date Published

மொராவியன்-சிலேசியன் :செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா, ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் 85.29 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இது அவரது முதல் ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்வெற்றியாகும்.
மேலும் ஜூன் 20, 2025 அன்று பாரிஸ் டயமண்ட் லீக் வெற்றிக்குப் பிறகு, ஐந்து நாட்களுக்குள் அவரது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியாகும். சொல்லப்போனால் இது, நீரஜின் பயிற்சியாளரும் உலக சாதனையாளருமான ஜான் ஜெலெஸ்னி தனது வாழ்க்கையில் ஒன்பது முறை வென்ற அதே போட்டி இதுவாகும். 1986 மற்றும் 2006 கால இடையில் அவர் பட்டத்தை வென்றார்.
முன்னதாக, காயம் காரணமாக கடந்த இரண்டு முறை நீரஜ் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் இந்த முறை அவர் அதில் பங்கேற்று வெற்றி பெற்றார். நீரஜ் அற்புதமாக செயல்பட்டு முதலிடத்தில் இருந்தார்.
நீரஜ் இந்தப் போட்டியை ஒரு ஃபவுல் மூலம் தொடங்கினார். இதன் பிறகு அவர் இரண்டாவது முயற்சியில் 83.45 மீட்டர் எறிந்தார், ஆனால் மூன்றாவது முயற்சியில் அவர் 85.29 மீட்டர் எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார், அது இறுதியில் அவரை வெற்றியாளராக மாற்ற போதுமானதாக இருந்தது.
இதற்கு அதற்கடுத்தபடியாக, தென்னாப்பிரிக்காவின் டோவ் ஸ்மிட் 84.12 மீட்டர் எறிந்து இரண்டாம் இய்டத்தையும், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் எறிந்து மூன்றாம் இய்டத்தையும் பிடித்தனர்.