"நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி"...சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!
Author
bala
Date Published

லீட்ஸ் :இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது.போட்டியின் போது களத்தில் இரண்டு வீரர்களுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தை தொடர்பான வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகும். ஏற்கனவே, உனக்கு ரன் ஓட முடியலைன்னா "நோ" சொல்லு என கில்லிடம் ஜெய்ஷ்வால் சொன்ன வீடியோ வைரலாகி இருந்தது.
அதனைத்தொடர்ந்து, இப்போது கே.எல்.ராகுல், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சனுடன் மைதானத்தில் உரையாடும்போது, தமிழில் பேசி, ஆட்டத்தின் சூழல் குறித்து கலந்துரையாடினார். இந்த வீடியோ காட்சி, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் கே.எல்.ராகுல், சக வீரர் சாய் சுதர்சனுடன் தமிழில் பேசிய ஒரு சுவாரஸ்யமான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் "நல்ல Bounce இருக்கு மச்சி" என்று ராகுல் தமிழில் கூறியது, அருகில் இருந்த இங்கிலாந்து வீரர்களை குழப்பத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. "நல்ல Bounce இருக்கு மச்சி" என்ற அவரது பேச்சு, பந்து மைதானத்தில் நன்கு குதிப்பதைக் குறிப்பதாக இருந்தது. இந்த உரையாடல், மைதானத்தில் எதிரணி வீரர்களை குழப்புவதற்காகவும், அணியினரிடையே ரகசியமாக தகவல் பரிமாறிக்கொள்ளவும் உதவியதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
unknown nodeமேலும், கே.எல்.ராகுல், கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பேசுவதில் திறமை பெற்றவர். எனவே, அவருக்கு மறுமுனையில் இருந்த சாய் தமிழகத்தை சேர்ந்த வீரர் என்பதால் அவரிடம் எளிதாக கே.எல்.ராகுல் தமிழில் பேசினார்.