கோப்பை பெங்களூருக்கு வர வேண்டும் என்பது எனது கனவு...முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா எமோஷனல்!
Author
bala
Date Published

அகமதாபாத் :ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 18 ஆண்டுகள் நீடித்த கோப்பை கனவை நினைவாக்கியது. இந்த வெற்றி ஆர்.சி.பி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் பெருமைமிக்க தருணமாக அமைந்தது.
அவரது தலைமையில் 2008இல் தொடங்கப்பட்ட ஆர்.சி.பி, பல ஆண்டுகளாக கோப்பையின் வெற்றிக்காகப் போராடியது. எனவே. ஒரு வழியாக பெங்களூர் கோப்பை வென்ற காரணத்தால் விஜய் மல்லையாவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். விஜய் மல்லையா 2008இல் ஆர்.சி.பி அணியை நிறுவியபோது, அது பெங்களூருக்கு ஐ.பி.எல் கோப்பையைக் கொண்டுவர வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. எனவே, அந்த சமயம் கலக்கிய இளம் வீரர் விராட் கோலியை அணியில் சேர்த்தார்.
அவர் என்ன நினைத்து அணியில் விராட் கோலியை அணியில் எடுத்தாரா என்று தெரியவில்லை. ஆனால், 18-ஆண்டுகளாக விராட் தான் அணியின் முதுகெலும்பாக உள்ளார். எனவே, பெங்களூர் கோப்பையை வென்றதற்கு விஜய் மல்லையா மிகவும் எமோஷனலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மல்லையா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் "நான் முதலில் ஆர்.சி.பி அணியை நிறுவியபோது, கோப்பை வெல்ல வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. இளைஞராக இருந்த 'கிங்' கோலியை எடுத்ததை பெருமையாக உணர்ந்தேன். அவரும் 18 ஆண்டுகளாக இதே அணியிலேயே இருந்துவிட்டார். அதைப்போல, கிறிஸ் கெய்லை யுனிவர்ஸ் பாஸ் மற்றும் Mr 360 AB டிவில்லியர்ஸ் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் பெருமையும் எனக்குக் கிடைத்தது, அவர்கள் RCB வரலாற்றில் அழிக்க முடியாத பகுதியாக உள்ளனர்.
ஒருவழியாக பெங்களூரு அணிக்கு கோப்பை கிடைத்துவிட்டது. கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி. ஆர்.சி.பி ரசிகர்கள்தான் சிறந்தவர்கள், அவர்கள் நிச்சயம் இந்தக் கோப்பைக்கு தகுதியானவர்கள்" எனவும் பதிவிட்டுள்ளார்.
unknown nodeவிஜய் மல்லையா 2008ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியை 111.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். ஆனால், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி, நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாத பிரச்சினைகள் காரணமாக விலகினார். விஜய் மல்லையாவுக்கு பிறகு, ஆர்.சி.பி அணியின் உரிமையை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யு.எஸ்.எல்) முழுமையாக எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.