''கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!
Author
gowtham
Date Published

சென்னை :நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,755ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 6-ம் தேதி மட்டும் இந்தியாவில் கொரோனாவல் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 194 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 27 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, பொது சுகாதாரத்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ''மீண்டும் கொரோனா தொற்று பரவல் வந்தால், அதை சமாளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கிறோம் என்றும். மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்கள் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வருகின்றன. புதிதாக சேர்வோருக்கு கலந்தாய்வு நடத்தி, விரும்பும் பகுதியில் பணி நியமனம் தரப்படுகிறது.
முன்னதாக, கொரோனா பரவல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், ''பொதுமக்கள் பீதியடைய வேண்டாம், தற்போதைய வைரஸ் பரவல் மிகவும் கடுமையானது அல்ல என்றும், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போதைய வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டதல்ல என்றும்' அவர் தெரிவித்துள்ளார்.