Payload Logo
இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது? அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு.!

Author

gowtham

Date Published

Parliament Monsoon Session

டெல்லி :நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் பொதுவாக நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறுகிறது, அதேசமயம் ஜூலை மாதத்தில் தொடங்குவது மழைக்கால கூட்டத்தொடராகும். தற்போதைய தகவல்களின்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் 22 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இந்திய அரசாங்கத்தின் முக்கியமான சட்டமுன்வடிவுகளை விவாதிக்கவும், நிறைவேற்றவும் கூட்டப்படுகிறது.  மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக முக்கியமான சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்துவதற்கும், நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும் ஒரு தளமாக அமைகிறது.

அரசாங்கத்தின் கொள்கைகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகள், மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் இதில் கவனம் பெறுகின்றன.