Payload Logo
இந்தியா

விமான விபத்தில் உயிர் தப்பியவரை சந்தித்த அமைச்சர் அமித்ஷா.!

Author

gowtham

Date Published

Amit Shah meets lone survivor

குஜராத் :அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்று கொண்டிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம் AI171, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக விபத்துக்குள்ளானது.

முதற்கட்டமாக தொழில்நுட்ப மற்றும் ஹைட்ராலிக் கோளாறுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர்.விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், உயிர்த்தப்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  குறிப்பாக,  உயிரிழந்த 241 பேரில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர்.

அந்த வகையில், அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபரின் பெயர் விஸ்வாஸ்குமார் ரமேஷ் ஆகும். அவரின் சகோதரர் அஜய்குமார் விமானத்தில் பயணித்த நிலையில், அவர் பரிதாபமாக பலியானார். ஆனால் ரமேஷ் மட்டும் விமானத்தின் அவசர வெளியேறும் இடத்திற்கு அருகில் அமர்ந்திருந்து, அங்கிருந்து வெளியே குதித்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

வைரலாகும் சமூக ஊடகக் காட்சிகளில், இரத்தக்கறை படிந்த வெள்ளை டி-சர்ட்டும், அடர் நிற பேண்ட்டும் அணிந்த ஒரு நபர் தெருவில் நொண்டி நடப்பதையும், அவருக்கு மருத்துவர் உதவி செய்வதையும் காட்டியது. அந்த நபரின் முகத்தில் காயங்களும் இருந்தன. விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்த விஸ்வாஷ்குமாரின் புகைப்படங்களை வெளியிட்டன.

முதலில் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்திற்கு நேரடியாக சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா. குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் சேர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர், விமானத்திலிருந்து குதித்து உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் ரமேஷை பார்க்க மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர் அமித்ஷா சந்தித்து நலம் விசாரித்தோடு, விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் காயம் அடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்கள் சமித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''ஏர் இந்தியா விமான விபத்தில் பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, உயிரிந்தோரின் குடும்பங்களுக்கு துணையாக இருப்போம். விமான விபத்தில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்தேன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகே சொல்ல முடியும்''என்று குறிப்பிட்டுள்ளார்.