Payload Logo
இந்தியா

ஆர்சிபி வெற்றி விழாவில் சோகம்.., மெட்ரோ நிலையங்கள் மூடல்.!

Author

gowtham

Date Published

Chinnaswamy Stadium -Bengaluru

பெங்களூரு :18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், தங்கள் அணி கோப்பை வென்றதை கொண்டாடி தீர்க்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டனர்.

எங்கும் பார்த்தாலும் சிவப்பு ஜெர்ஸியும், ஆர்சிபி வாழ்த்து கோஷங்களும் முழங்குகின்றன. இந்நிலையில் தான் இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் கொண்டாட்ட விழா பாதியில் நிறுத்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆர்சிபி ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் கர்நாடகா போலீசார் தடியடி நடத்தினர். இப்படி இருக்கையில், பெங்களூரு சின்னச்சாமி மைதானம் அருகே அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், சென்ட்ரல் காலேஜ், விதான் சௌதா, கப்பன் பார்க், MG ரோடு, Trinity ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது.