Payload Logo
தமிழ்நாடு

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

Author

gowtham

Date Published

DMK Parliamentarians Meeting

சென்னை :நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம் தேதி (ஜூலை 18, 2025) திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மற்றும் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.