Payload Logo
சினிமா

என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு.., விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு.!

Author

gowtham

Date Published

Thalapathy Vijay - mamitha baiju

சென்னை :இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில், ஜன நாயகன் பற்றிய அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

விஜய் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் அவரது விடைபெறும் கடைசி படம் என்று கூறப்படும் இந்த படம், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் பிரேமலு பட நடிகை மமிதா பைஜுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், 2K கிட்ஸை அதிகம் கவர்ந்துள்ள மமிதா பைஜூ விஜய்யுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த மமிதா பைஜு, ''விஜய் சார் ரொம்ப கூலாவும், நட்பாவும் இருந்தாரு. முதல்ல அவரைப் பார்த்தப்போ கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு, ஆனா அவர் என்னை ரொம்ப அன்பா வரவேற்றார். படப்பிடிப்பில் என்கிட்ட வந்து, 'ஹாய், எப்படி இருக்கீங்க?'ன்னு கேட்டார். நான் ரொம்பவே அதிர்ச்சியடைந்தேன், ஒரு நிமிஷம் உறைஞ்சு போயிட்டேன். அது ரொம்பவே சுவாரஸ்யமா இருந்துச்சு, இந்த வாய்ப்புக்கு நான் நன்றி சொல்லணும்," என்று அவர் கூறினார்.

அவரிடமிருந்து தான் கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு பழக்கத்தைப் பற்றிப் பேசுகையில், "விஜய் நேரம் தவறாதவர் என்றும் ஷூட்டிங்கில் என்ன நடந்தாலும் கூலாக ஹேண்டில் பண்ணுவார். ரொம்ப கூல். ஜனநாயகன் படப்பிடிப்பில் என்ன நடந்தாலும், அதை ரொம்ப கூலாகக் கையாள்வார். நான் அவரிடம் பல விஷயங்களைப் பேசுவேன். மேலும், விஜய் நல்ல Listener எனக் குறிப்பிட்டு, அவரிடம் ஷூட்டிங்கில் பல விஷயங்களை பேசினாலும், அனைத்திற்கும் 'ம்ம்', 'ஹா' என அமைதியாக கேட்பார் என தெரிவித்தார்.

இதனிடையே, மமிதா பைஜு விரைவில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து 'இரண்டு வானம்' படத்தில் நடிக்கவுள்ளார். அவர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவை வைத்து நடிக்கும் படத்திலும் பணியாற்றி வருகிறார். மேலும், இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் டியூட் படத்திற்காக டிராகன் பட நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஜன நாயகன் ஜனவரி 9, 2026 அன்று திரைக்கு வரவுள்ளது.