சினிமா
கார் விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் டாம் சாக்கோ... தந்தை உயிரிழந்த சோகம்.!
Author
gowtham
Date Published

தர்மபுரி :பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவரது தந்தை உயிரிழந்ததாகவும், அவரது தாய் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தருமபுரி - பாலக்கோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடன் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் நிகழ்விடத்திலேயே அவரது தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த நடிகர் சைன் சாக்கோ மற்றும் அவரது தாய் படுகாயத்துடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவரது சகோதரருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷைன் டாம் சாக்கோ அண்மையில் வெளியான குட் பேட் அக்லி, டாக்கு மகாராஜ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.