Payload Logo
தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ்: "கற்பனை காட்சிக்கே 10 வருஷமா?" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

Author

gowtham

Date Published

Mk stalin - MADURAI AIIMS

சென்னை :2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 3டி வீடியோ வெளியீட்டை கடுமையாக விமர்சித்தார்.

அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக "கற்பனைக் காட்சிகளை" (3D வீடியோ) மட்டும் வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? என முதலமைச்சர்  ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருப்பதாக வேதனை தெரிவித்த அவர், உள்துறை அமைச்சரிடம் இதுகுறித்து கேட்டதற்கு கற்பனைக் காட்சிகளை உருவாக்கியுள்ளதாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ''2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதுமா? மதுரை வந்த உள்துறை அமைச்சர் 'எய்ம்ஸ்' என்ன ஆனது என சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்காக, இந்த கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node