ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
Author
gowtham
Date Published

சென்னை :திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமனும் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஒருவேளை இந்த வழக்கில் ADGP ஜெயராம் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. பின்னர், முதல் ஆளாக உயர்நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராமன் ஆஜராகினார். ஆனால், ஜெகன்மூர்த்தி ஆஜராகவில்லை என சொல்லப்பட்டநிலையில், சற்று நேரத்திற்கு முன் விசாரணைக்கு தனது வழக்கறிஞர்களுடன் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜர் ஆகினார்.
இதனை தொடர்ந்து, சிறுவன் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமனை கைது செய்து, உடனடியாக அவரை சிறையில் அடைக்க நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். ஏடிஜிபி எச்.எம். ஜெயராமுக்கு ஆள் கடத்தல் வழக்கில் நேரடியான தொடர்பு இல்லை என்றாலும், அவரது கார் இந்தக் குற்றச் செயலில் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெயராமின் கார் கடத்தப்பட்ட சிறுவனை விடுவிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும், அது காவலரால் ஓட்டப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், ஜெயராம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவராகக் கருதப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றம் அவரை ஆஜராக உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.