Payload Logo
தமிழ்நாடு

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

Author

gowtham

Date Published

Justice For Ajithkumar

சென்னை :திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) போராட்டம், அதே மைதானத்தில் ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால், வரும் ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேபாக்கம் சிவானந்தா சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அஜித்குமார் மரண வழக்கை உயர் நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற காவல் மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க தலைவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், ” சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்'' என வலியுறித்திருந்தார்.