போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
Author
gowtham
Date Published

சென்னை :ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர், மோதல் அல்லது துன்புறுத்தல் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நபர்களுக்காக, இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
உலக அகதிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வறுமையை ஒழிப்பதில் ஐரோப்பிய நாடுகளை முந்திய தமிழ்நாடு என்றும், நிதி ஆயோக் அறிக்கையை சுட்டிக் காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், ''பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள். மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்.
நமது திராவிட மாடலில் அகதிகள் முகாம் என்பதை மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றினோம். அன்னைத்தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம், வாழ்வாதாரம் வாழ்வுரிமையை பாதுகாக்கிறோ. போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node