Payload Logo
தமிழ்நாடு

''தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்'' - அன்புமணி பதிவு!

Author

gowtham

Date Published

anbumani ramadoss

விழுப்புரம் :பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே கட்சியின் தலைமைப் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இப்படி இருக்கையில், இன்று தந்தையர் தினம் என்பதால், 'தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்' என்று அன்புமணி ராமதாஸின் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், '' "தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம், ஆக்குதல் அன்னையரின் பணி என்றால் அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஒரு பக்கம், திருவள்ளூரில் காலை 11 மணிக்கு நடக்கும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கிறார். மறுபக்கம், தைலாபுரம் இல்லத்தில் பாமக புதிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். பாமகவில் புதிதாக நியமிக்கப்பட்ட வட மாவட்டத் தலைவர்கள், செயலர்களுடன் ராமதாஸ் ஆலோசனை மேற்கொள்கிறார்.