Payload Logo
செஸ்

நார்வே செஸ் : கடைசி நேரத்தில் தோல்வியடைந்த குகேஷ்...பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Author

bala

Date Published

The 2025 Norway Chess

நார்வே செஸ் :நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் சென்று சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார்.

அதே சமயம் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தார்.  10-வது சுற்றான இறுதி சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் அனுபவம் வாய்ந்த வீரர் ஃபேபியானோ கருவானாவுடன் மோதிய நிலையில்,  குகேஷ் ஒரு பெரிய தவறான முன்னேற்றத்தை (tactical blunder) செய்தார். அந்த தவறை கருவானா உடனே பயன்படுத்தி, ஆட்டத்தை தனது வசமாக மாற்றினார். இதனால்தான் குகேஷ் அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தார்.

தோல்வி அடைந்தாலும் புள்ளி விவர பட்டியலில் குகேஷ் மூன்றாவது இடம் பிடித்தார். குகேஷ், கருவானாவை வென்றிருந்தால், அவருக்குத் மொத்தம் 16.5 புள்ளிகள் கிடைத்திருக்கும். அதாவது மக்னஸ் கார்ல்சனை விட அரை புள்ளி அதிகமாக இருந்திருக்கும். அப்படியென்றால், குகேஷ் தான் 2025 நோர்வே செஸ் சாம்பியனாக அறிவிக்கப்பட்டிருப்பார். ஆனால், கடைசி நேரம் சற்று தடுமாறி கடைசி சுற்றில் தோல்வி அடைந்தது பெரிய சோகமான விஷயமாகவும் அமைந்துள்ளது.Read More - நார்வே செஸ் : குகேஷ் கனவுக்கு செக் வைத்த ஃபேபியானோ…மீண்டும் சாம்பியனான மக்னஸ் கார்ல்சன்!எனவே, ரசிகர்கள் பலரும் இந்த முறை விடுங்கள் அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்பது போல குகேஷிற்கு உத்வேகம் அளித்து வருகிறார்கள். இந்நிலையில், 3-வது இடம் பிடித்த குகேஷ், ஜாம்பியனான மக்னஸ் கார்ல்சன் உள்ளிட்டோருக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.பரிசுத் தொகை விநியோகம் (ஒவ்வொரு தொடருக்கும்):ஒரே புள்ளிகளைப் பெறும் வீரர்கள் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள், ஆனால் முதல் இடத்திற்கு இது பொருந்தாது. அப்படி முதல் இடத்திற்கு டை இருந்தால், பிளே-ஆஃப் அல்லது இரட்டை ரவுண்ட்-ராபின் முறையில் முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.