Payload Logo
தமிழ்நாடு

கீழடி விவகாரம்: 'இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை' - மத்திய அமைச்சர்.!

Author

gowtham

Date Published

Gajendra Singh Shekhawat MKStalin

கீழடி ஆய்வு முடிவுகளை போதிய ஆய்வு முடிவுகள் வந்த பிறகும் மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், நேற்று முன் தினம் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்,'' இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும்'' எனத் தெரிவித்திருந்தார்.

தற்பொழுது, அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கிடைத்தால், தாங்களும் பெருமை கொள்வோம் என்றும் ஆனால் இன்றைய அறிவியல் உலகிற்கு வலுவான தரவுகள் தேவை எனவும் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது, அவரின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், ''நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின்ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல்தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடரவிரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் - பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node