Payload Logo
இந்தியா

"கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு" - கமல் தரப்பு வழக்கறிஞர்.!

Author

gowtham

Date Published

kamal haasan - Karnataka High Court

கர்நாடகா:நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், அவரின் தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து கமல்ஹாசன் நேற்றைய தினம் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், ''கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட மாட்டோம், ஒரு வார காலம் அவகாசம் வேண்டும். திரைப்பட சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது'' கமல் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கர்நாடக உயர்நீதிமன்றம் "கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க அவரது ஈகோ தடுக்கிறதா? மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என நீதிமன்றம் கூறவில்லை, திரைப்பட சம்மேளன அமைப்பு கேட்கிறது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு கொடுத்து ஏன் தக் லைஃப் படத்தை வெளியிட வேண்டும் எதன் அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என பேசினீர்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம் எனக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க நடிகர் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக திரைத்துறை வர்த்தக சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும் வரை கர்நாடகாவில் ஜூன் 10ஆம் தேதி வரை திரைப்படம் வெளியிட ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு ஜூன் 10 பிற்பகல் 3.30-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.