Payload Logo
சினிமா

'தக் லைஃப்' படத்திற்கு தடை: கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய கமல்ஹாசன்.!

Author

gowtham

Date Published

Thug Life - kamal hasaan

கர்நாடகா :கடந்த மே 24 அன்று சென்னையில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் பேசியது கன்னட அமைப்பினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

இதனால், அவர் நடித்த தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், மாநிலத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க கமல்ஹாசன் நாடியுள்ளார்.

ஆம், தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கமல் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்த மனுவில், கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் படம் வெளியிடுவதைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

திரைப்படம்  திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் நகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.