முதல் நாளே மிரட்டல்.., இங்கிலாந்தை கதறவிட்ட ஜெய்ஸ்வால் - சுப்மன் கில்.!
Author
gowtham
Date Published

அதன்படி, இங்கிலாந்தில் முதல் நாளில் 359 ரன்கள் எடுத்து இந்தியா பல சாதனைகளை முறியடித்தது.
இந்த சாதனைகளில் ஒன்று முதல் நாளில் இரண்டு சதங்கள். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தது இதுவே முதல் முறை. இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணத்தின் முதல் நாளிலேயே சதம் அடித்த முதல் இந்திய பார்ட்னர் ஷிப் என்ற பெருமையை கில்-ஜெய்ஸ்வால் பெற்றுள்ளனர். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மூன்றாவது சம்பவமாகும்.
முன்னதாக 2001 ஆம் ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஜோடி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் முதல் நாளிலேயே சதம் அடித்திருந்தது, அடுத்ததாக 2017 ஆம் ஆண்டு, ஷிகர் தவான் மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஜோடி இலங்கை சுற்றுப்பயணத்தின் முதல் நாளிலேயே சதம் அடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.