Payload Logo
இந்தியா

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? - ஜெகதீப் தன்கர் கலகல...,

Author

gowtham

Date Published

Jagdeep Dhankhar

புதுச்சேரி :குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று குடியரசு துணை தலைவர், “தேசத்தைக் கட்டி எழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைதன்மை” என்ற தலைப்பில் ஜிப்மர் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், இந்த நிகழ்வில் புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கே. கைலாஷ்நாதன், முதல்வர் என். ரங்கசாமி, சட்டமன்ற சபாநாயகர் ஆர். செல்வம், ராஜ்யசபா எம்.பி. எஸ். செல்வகணபதி, மக்களவை எம்.பி. வி. வைத்திலிங்கம், எம்.எல்.ஏ. வி. அருமௌகமே உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், நிகழ்ச்சியின் போது ஜிப்மரின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் ஜெகதீப் தன்கர் மேடையில் பேசி கொண்டிருக்கும் பொழுது, திடீரென BEEP.., BEEP என Fire Alarm ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக பேச்சை நிறுத்திய குடியரசு துணைத் தலைவர், ‘எனது உரையை முடிக்கச் சொல்லி அலாரமா?' என நகைச்சுவையாக கேட்டுவிட்டு பேச்சை தொடர்ந்தார். பின்னர், இந்த சப்தம் குறித்து உளவுப்பிரிவினர் ஜிப்மர் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.