கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க சொல்வது உயர்நீதி மன்றத்தின் வேலை இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி!
Author
bala
Date Published

கர்நாடகா :தக்லைஃப் திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனத்தை பெற்று கொண்டு வருகிறது. இருப்பினும், திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. ஏனென்றால், படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கன்னட தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என உறுதியாக நின்றார். அதே சமயம், இந்த வழக்கினை விசாரிப்பதற்கு முன்பே கர்நாடக உயர்நீதிமன்றம் முதலில் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் மனுவை விசாரிப்போம் என்று கூறியது. பின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி மன்னிப்பு கேட்டால் தான் படம் ரிலீஸ் செய்ய உத்தரவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் படத்தை அங்கும் ரிலீஸ் செய்யவேண்டும் என்ற நோக்கில் கமல்ஹாசன் உறுதியாக இருக்கிறார். ஏற்கனவே, தக் லைஃப் படத்தினை வெளியீட தடை என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கை எதிர்த்து கமல்ஹாசன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்திருந்தது. எனவே, இன்று அதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்தது மட்டுமின்றி சில கேள்விகளையும் முன் வைத்துள்ளது.
அதன்படி, தக் லைஃப் பட விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க சொல்வது நீதிமன்றத்தின் வேலை இல்லை. அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எப்படி நீதிமன்றம் சொல்வது? படத்திற்காக அவரை மன்னிப்பு கேட்க சொல்லி மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்" என தெரிவித்தது.
அது மட்டுமின்றி, கர்நாடகாவில் தக் லைஃப் படத்தினை வெளியிட தடை விதிக்க முடியாது. ஒரு திரைப்படம் தடையில்லா சான்று பெற்றிருந்தால், எந்த பிரச்சினையும் இல்லாமல் திரையிட அரசு உறுதி செய்ய வேண்டும். திரைப்படம் வெளியாக அனுமதி செய்வது தான் சட்டபடியானதாக இருக்கும். எனவே, திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் இந்த வழக்கில் 24 மணி நேரத்திற்குள் கர்நாடக உயர்நிதி மன்றம் பதில் அளிக்கவேண்டும்" எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, கிட்டத்தட்ட தக் லைப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.