போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: 'மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்' - இஸ்ரேல் அறிவிப்பு.!
Author
gowtham
Date Published

இஸ்ரேல் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த 12 நாட்களாக நீடித்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார். ஆனாலும், ஈரான் உடனடியாக தாக்குதலை நிறுத்தவில்லை. ஆனால், இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து போர் நிறுத்தம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்பதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே 12 நாட்களாக நீடித்த போர் நிறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானுடனான போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கையில், '' ஈரானிய அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை இஸ்ரேல் அடைய முடிந்தது.
இந்த நடவடிக்கையின் இலக்குகளை அடைந்ததன் வெளிச்சத்திலும், ஜனாதிபதி டிரம்புடன் முழு ஒருங்கிணைப்பிலும், பரஸ்பர போர்நிறுத்தத்திற்கான அதிபர் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இருப்பினும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால், ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் அறிக்கையின் வாயிலாக எச்சரித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அளித்த ஆதரவிற்கும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை ஒழிப்பதில் பங்கேற்றதற்கும் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கு இஸ்ரேல் நன்றி தெரிவிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
unknown node