போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., 'தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்' - பறந்தது உத்தரவு.!
Author
gowtham
Date Published

இஸ்ரேல் :ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஆனாலும், ஈரான் உடனடியாக தாக்குதலை நிறுத்தவில்லை.
மறுபக்கம், டிரம்ப் அறிவித்த சில நேரம் கழித்து போர் நிறுத்தத்தை ஏற்பதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து போர் நிறுத்தம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், இஸ்ரேல் மீதான போரை நிறுத்துவதாக ஈரான் அரசி செய்தி ஊடகம் தெரிவித்திருந்தது.
இப்படி, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, "ஈரானின் போர் நிறுத்த மீறலுக்கு எதிராக தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள அரசு இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்கள் மூலம் கடுமையாக பதிலளிக்க வேண்டும்" என இஸ்ரேல் காட்ஸ் இஸ்ரேலிய இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
unknown node