விளம்பரம் உண்மையில் வினையான கதை இது தானா.! ஷாக்கிங் விளம்பரம் இணையத்தில் வைரல்.!
Author
gowtham
Date Published

அகமதாபாத் :நேற்றைய தினம் (ஜூன் 12) மதியம், லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787விமானம், அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 242 பேரில், ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார். மீதமுள்ள 241 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இதில், விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த விபத்து நேற்றைய மிட்-டே என்கிற ஆங்கில பத்திரிகை செய்தித்தாளில் இடம்பெற்ற விளம்பரத்துடன் ஒத்து போகிறது. அதாவது, கிட்ஜானியா நிறுவனத்தின் விளம்பரப்படுத்தும் ஒரு விளம்பரத்தில், ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் ஒரு அனிமேஷன் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிக்கியிருப்பதை சித்தரிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியான விளம்பரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காலை அந்த செய்தி தாளில் உள்ளது போல், பிற்பகலே இப்புகைப்படத்தில் அச்சு அசலாக போலவே அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததால் பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
unknown nodeஅச்சு அசலாக, விமான விபத்துக்குப் பிறகு விமானத்தின் முன் பகுதி ஒரு கட்டிடத்தில் சிக்கியிருப்பதை நாம் பாத்திருப்போம். உண்மையில் அதே காட்சி விளம்பரத்தில் வெளியிடப்பட்டதைப் போலவே இருப்பதால், விளையாட்டு வினையாகும் என்ற பழமொழிக்கேற்ப, என்னடா இது 'விளம்பரம் உண்மையில் வினையான கதை இது தானா' என்பது போல் அமைந்திருக்கிறது.