ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் - டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?
Author
gowtham
Date Published

ஈரான் :இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
ஈரானின் அணு உலகைகள் மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஈரானிய இந்த நடவடிக்கை உலக எரிசக்தி சந்தையில் கவலைகளை எழுப்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் குறைப்பு ஏற்படக்கூடும். இது எரிசக்தி விலைகளை அதிகரித்து பொருளாதாரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும்.
ஆம்.., இதை ஈரானின் இந்த திடீர் மூடினால் பாதிக்கப் போவது இந்தியா போன்ற நாடுகளே. இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இந்த பாதை வழியாகவே நடைபெறுகிறது. ஒரு பக்கம் இந்த வழியாக உலகின் 30% எண்ணெய் கப்பல்கள் பயணிக்கிறது. இதைமுடக்கினால் இந்தியாவில் பெட்ரோல் விலை இன்னும் கடுமையாக உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் மறுபக்கம், உக்ரைன் போருக்குப் பிறகு பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை மிகுந்த தள்ளுபடியில் வழங்குவதாக சொல்லப்டுகிறது. இதனால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகத்தை இந்தியா மேலும் அதிகரிக்க முடியும். ஜூன் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் மற்ற வளைகுடா நாடுகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதன் மூலம் இந்த அச்சுறுத்தலைக் குறைக்க முயற்சித்துள்ளது.ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கும் வளைகுடாவின் அரபு நாடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப் பெரிய எரிசக்தி பாதைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20% இந்த 33 கிலோமீட்டர் அகலமான பாதை வழியாக செல்கிறது. இது 3 கிலோமீட்டர் அகலமான கப்பல் பாதைகளை மட்டுமே கொண்டுள்ளது. எனவே, இந்த இடம் உலகளாவிய சந்தைகளுக்கு உணர்திறன் கொண்டது.
சவூதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஈரான் மற்றும் குவைத் போன்ற முக்கிய நாடுகள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய இந்த ஜலசந்தியை நம்பியுள்ளனர். குறிப்பாக, சீனாவும் ஆசியாவும் இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.இந்த ஜலசந்தியிலிருந்து இந்தியா தினமும் சுமார் 2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் மொத்த இறக்குமதியான 5.5 மில்லியன் பீப்பாய்களில் ஒரு பகுதியாகும். ஹார்முஸ் மூடல் இந்தியாவை அதிகம் பாதிக்காது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரேசிலில் இருந்து எண்ணெய் எடுத்து இந்தியா தனது ஆதாரங்களை பன்முகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைசசர் ஹர்தீப் சிங் பூரி சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ''கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கில் உருவாகி வரும் புவிசார் அரசியல் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த சில ஆண்டுகளாக எங்கள் விநியோகத்தை நாங்கள் பன்முகப்படுத்தியுள்ளோம்.
இப்போது எங்கள் விநியோகத்தில் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரவில்லை. எங்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பல வாரங்களுக்கு விநியோகத்தை மேற்கொள்கின்றன. அவர்கள் பல வழிகளில் இருந்து தொடர்ந்து எரிசக்தி விநியோகத்தைப் பெறுகிறார்கள். எங்கள் குடிமக்களுக்கு எரிபொருள் விநியோகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node