போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
Author
gowtham
Date Published

ஈரான் :அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், மேற்கு ஆசிய உச்சக்கட்டத்தில் பதற்றம் அடைந்துள்ளன. இருப்பினும், கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் நடந்த தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை.
ஈரான் முன்பே அறிவித்ததால் காயம், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது, ஈரானுக்கு நன்றி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது பெரும் சந்தேகத்தை கிளப்புவதால், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன் காரணாமாக, கத்தார், ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுமையாக மூடியுள்ளன. ஆனால், 12 நாள் நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு, ஈரான் மவுனம் கலைத்துள்ளது.
அதவாது, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது. இப்போதைக்கு போர் நிறுத்தம், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தம் எதுவும் இல்லை என ஈரான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராச்சி, ''எந்தவொரு போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இஸ்ரேல் ஈரான் மீது போரை தொடங்கியது, இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்"எனவும் குறிப்பிட்டுள்ளார்.
unknown node