'இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்' - ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
Author
gowtham
Date Published

ஈரான் :இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்தவில்லை.
முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பதிவில், ''தற்போது, எந்தவொரு போர்நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்தும் எந்த "ஒப்பந்தமும்" இல்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், முதலில் போர் நிறுத்தத்திற்கு ஈரான் மறுப்பு தெவித்திருந்தாலும், இப்பொது ஈரான் மற்றும் இஸ்ரேல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி காலை 7:30 மணிக்கு போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
unknown nodeஈரானின் இந்த அறிவிப்பைதொடர்ந்து இஸ்ரேல் உடன் 12 நாட்களாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வருகிறது. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், குறைந்தது ஆறு ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) குற்றம்சாட்டியுள்ளது. தெற்கு நகரமான பீர் ஷேவாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தைத் தாக்கியதில், 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
unknown node