Payload Logo
உலகம்

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

Author

gowtham

Date Published

IranIsrael Conflict

மத்திய கிழக்கு :இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு தலைவர் கொமேனி உத்தரவிட்டதை தொடர்ந்து, ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது இடைவிடாது தாக்குதல் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்களுடன் தொடர்புடைய முக்கிய தளங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியதாக தெரிவித்துள்ளது.

அவை, புளூட்டோனியம் உற்பத்தியில் முக்கிய அங்கமான அராக்கில் செயலற்ற அணு உலை, நடான்ஸுக்கு அருகிலுள்ள ஒரு அணு ஆயுத மேம்பாட்டு தளம். பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு உற்பத்தி வசதிகள். ரேடார் அமைப்புகள் மற்றும் ஏவுகணை சேமிப்பு தளங்கள் ஆகிய அடங்கும்.

தற்பொழுது, ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்துவரும் நிலையில், இன்று (ஜூன் 19) இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் 4 இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பிரபல மருத்துவமனையான சொரோகா மருத்துவமனையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல் அவிவில் உள்ள பங்குச்சந்தை கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானது.

இதையடுத்து, மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். பின்னர், ''இஸ்ரேலில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், மருத்துவமனையை நாங்கள் குறிவைக்கவில்லை. ராணுவத் தளம் மற்றும் உளவுப் பிரிவு தளம் மட்டுமே எங்கள் இலக்கு. அவை கவ்-யாம் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ளன.

அந்தப் பூங்காவுக்கு அருகே தான் சொரோகா மருத்துவமனை உள்ளது. நாங்கள் நடத்திய தாக்குதலின் அதிர்வலைகளால் காரணமாக ஏற்பட்ட பாதிப்புதான் மருத்துவமனையில் உணரப்பட்டதே தவிர, எங்களின் இலக்கு மருத்துவமனை அல்ல” என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.