இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!
Author
gowtham
Date Published

அமெரிக்கா :ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில் "CHAT WITHOUT INTERNET" செயல்படும் 'பிட்சாட்' (BITCHAT) என்ற புதிய செய்தியிடல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி, இணையம் (Network), வைஃபை (WiFi) அல்லது மொபைல் நெட்வொர்க் தேவையில்லாமல் புளூடூத் மெஷ் நெட்வொர்க்கிங் (BLE) வழியாக செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது. மேலும், 'பிட்சாட்' பயன்பாட்டில், பயனர்களுக்கு தொலைபேசி எண்ணோ அல்லது அக்கவுண்டோ தேவையில்லை. இந்த பயன்பாடு முற்றிலும் சாதனத்திலிருந்து சாதனத்திற்கு இடையிலான தொடர்பை அடிப்படையாகக் கொண்டது. தனியுரிமையை மையமாகக் கொண்டு, ஐபோன் பயனர்கள் தற்போது இந்த செய்தியிடலை டெஸ்ட் ஃப்ளைட் பயன்முறையில் பயன்படுத்தலாம். மேலும் டோர்சி GitHub இல் உள்ள கட்டமைப்பை விவரிக்கும் தொழில்நுட்ப வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். சொல்லப்போனால், இந்த செயலி 2019 ஹாங்காங் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட புளூடூத் அடிப்படையிலான செயலிகளை போல் ஒத்துபோகும். இது இணைய முடக்கங்கள் அல்லது கண்காணிப்பு நிலவும் சூழல்களில் பயனுள்ளதாக இருக்கும். Bitchat, பேரிடர் மீட்பு, போராட்டங்கள், தொலைதூர பகுதிகள் மற்றும் தனியுரிமையை விரும்பும் பயனர்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இணையம் இல்லாமல் செயல்பாடு:Bitchat பயன்படுத்த பயனர்களுக்கு மின்னஞ்சல், தொலைபேசி எண் அல்லது கணக்கு தேவையில்லை. இது முற்றிலும் புழக்கத்தில் உள்ள மையப்படுத்தப்பட்ட சேவையகங்களை நம்பாது.பாதுகாப்பு மற்றும் தனியுரிமை:செய்திகள் எண்டு-டு-எண்டு குறியாக்கம் (end-to-end encryption) செய்யப்பட்டு, பயனர்களின் சாதனங்களில் மட்டுமே தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு செய்திகள் தானாக அழிக்கப்படுகின்றன.மெஷ் நெட்வொர்க்:அருகிலுள்ள சாதனங்கள் ஒரு கிளஸ்டரை உருவாக்கி, செய்திகளை ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு அனுப்புகின்றன. இதனால், புளூடூத்தின் வழக்கமான 30 மீட்டர் வரம்பைத் தாண்டி, 300 மீட்டர் வரை செய்திகள் பயணிக்க முடியும்.குரூப் சாட் :"ரூம்ஸ்" எனப்படும் குழு அரட்டைகளை உருவாக்கலாம், இவை ஹேஷ்டேக் மூலம் பெயரிடப்பட்டு கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படலாம். மேலும், "ஸ்டோர்-அண்ட்-ஃபார்வர்டு" அம்சம் மூலம் ஆஃப்லைனில் இருக்கும் பயனர்களுக்கு செய்திகள் பின்னர் வழங்கப்படும்.