Payload Logo
கிரிக்கெட்

INDvsENG : "நானும் சதம் அடிப்பேன்"...தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

Author

bala

Date Published

dhoni test Rishabh Pant

லீட்ஸ் :இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், அபாரமாக சிக்ஸர் விளாசி தனது 7வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 359/3 என்ற வலுவான நிலையில் இருந்தது, இதில் பண்ட் 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் ஜெய்ஷ்வால், சுப்மன் கில் இருவரும் சதம் விளாசி இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து நீங்க மட்டும் தான் அடிப்பீங்களா? நானும் அடிப்பேன் என்பது போல இரண்டாவது நாளில், தனது இன்னிங்ஸைத் தொடர்ந்து, 124 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் சதத்தை எட்டினார்.

இந்த சதம், இங்கிலாந்து மண்ணில் அவரது மூன்றாவது டெஸ்ட் சதமாகும், இதற்கு முன் 2018ல் ஓவல் மைதானத்தில் 114 ரன்களும், 2022ல் எட்ஜ்பாஸ்டனில் 146 ரன்களும் அடித்திருந்தார்.  அதே சமயம் சில சாதனைகளையும் இந்த சதம் மூலம் ரிஷப் பண்ட் படைத்துள்ளார் என்பதால் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்துகொண்டு வருகிறது.

அது என்ன சாதனை என்றால்,  SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக அதிக ரன்கள் (1,746 ரன்கள், 27 போட்டிகள், 38.80 சராசரி) குவித்தவர் என்ற முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார்.

இந்த இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்களை விளாசிய பண்ட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். 35 டெஸ்ட் போட்டிகளில் 58 சிக்ஸர்களை அடித்து, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் 56 சிக்ஸர்கள் (40 போட்டிகள்) என்ற சாதனையை முறியடித்தார். ஒட்டுமொத்த பட்டியலில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (83 சிக்ஸர்கள், 54 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார்.

அதைபோல, இந்த சதம், இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிக டெஸ்ட் சதங்கள் (7) என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். எம்எஸ் தோனி 6 சதங்கள் விளாசிய நிலையில், அவர் அடுத்த இடத்தில் உள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் ஏற்கனவே தோனியின் சாதனையைப் பண்ட் சமன் செய்திருந்தார். இந்த சதத்துடன், அவர் இந்தப் பட்டியலில் முதலிடத்தை நோக்கி முன்னேறியுள்ளார்