Payload Logo
கிரிக்கெட்

INDvsENG : "ஆரம்பே அமர்க்களம்"..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

Author

bala

Date Published

nitish kumar reddy

லண்டன் :இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளது. 2 போட்டிகள் முடிந்த நிலையில் மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நாங்கள் பேட்டிங் செய்ய போகிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, இங்கிலாந்து அணியை தனது முதல் ஓவரிலேயே திணறவைத்தார். 14வது ஓவரில் பந்துவீசிய நிதிஷ், இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான பென் டகெட் (23 ரன்கள், 40 பந்துகள்) மற்றும் ஸாக் க்ராலி (18 ரன்கள், 43 பந்துகள்) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி, அணியை 44/2 என்ற நிலைக்கு தள்ளினார். இந்த அற்புதமான பந்துவீச்சு, “ஆரம்பமே அமர்க்களம்” என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது, மேலும் சமூக ஊடகங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) பதிவுகள் மூலம் பரவலாகப் பேசப்பட்டது. இந்த போட்டியில் அவர் 14வது ஓவரின் மூன்றாவது பந்தில் பென் டகெட்டை ரிஷப் பந்த் மூலம் கேட்ச் ஆக வீழ்த்திய நிதிஷ், அதே ஓவரின் கடைசி பந்தில் ஸாக் க்ராலியையும் கேட்ச் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளும் இங்கிலாந்து அணியின் தொடக்கத்தை சீர்குலைத்து, இந்திய அணிக்கு மேலாதிக்கத்தை ஏற்படுத்தியது. நிதிஷ் குமார் ரெட்டி, ஆந்திராவைச் சேர்ந்த 22 வயது இளம் வீரர், 2024 நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் ட்ரோஃபியில் டெஸ்ட் அறிமுகமானவர். அவரது முதல் டெஸ்ட் நூற்றாண்டு மெல்போர்னில் பதிவானது, மேலும் இந்தத் தொடரில் 298 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அதே பார்மில் இன்றய போட்டியில் செயல்பட்டு வருவதால் அனைவருடைய கவனமும் அவருடைய மீதி திரும்பி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.