Payload Logo
உலகம்

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

Author

gowtham

Date Published

Indians leave Ira

ஈரான் :ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,  ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. டெஹ்ரானில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் தலைநகரில் குறைந்தது 73 பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் எஸ்மாயில் பக்காய் தெரிவித்தார்.

தற்போது, தெஹ்ரானில் இருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதை அடுத்து, ஈரான் முழுவதும் உள்ள இந்தியர்கள், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள வாயிலாக உதவியை நாடுகிறார்கள். இதனால், உதவியை ஒருங்கிணைக்கவும், தகவல்தொடர்புகளை ஒழுங்கமைக்கவும், இந்தியாவிற்கு பாதுகாப்பான பாதையை ஒழுங்கமைக்கவும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தால் ஒரு குழு உருவாக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், ஈரானிய அதிகாரிகளுடன் இணைந்து, இந்திய மாணவர்களை தலைநகரில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளது. அதன்படி, ஈரானில் உள்ள இந்தியர்களை பேருந்து மூலம் அர்மேனியா எல்லைக்கு அழைத்து வந்து அங்கிருந்து விமானம் (அல்லது) கப்பல் மூலம் அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரானில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் உள்ளனர், அவர்களை வெளியேற்ற முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, ஈரானில் சுமார் 10,000 இந்திய குடிமக்கள் உள்ளனர், அதே நேரத்தில் 2022 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் ஈரானில் 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பட்டியலிட்டுள்ளன.