Payload Logo
கிரிக்கெட்

WTC Final : 282 அடிச்சா கோப்பை உங்களுக்கு...தென்னாப்பிரிக்காவுக்கு டார்கெட் வைத்த ஆஸி!

Author

bala

Date Published

WTC Final 2023-25

லண்டன் :உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல்  லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி புஸ் என தடுமாறி விக்கெட்களை இழந்தது முதல் இன்னிங்ஸில், 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி  எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் எடுத்தனர், இருவரின் அரைசதங்கள் அடித்த நிலையில்,  அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டியது. தென்னாப்பிரிக்கா அணிக்காக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய  தென்னாப்பிரிக்கா மிகவும் தடுமாறியது என்று சொல்லலாம். ஏனென்றால், 57.1  ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக ஆஸி அணி 74 ரன்கள் முன்னிலையில் இருந்தது. அடுத்ததாக, தங்களுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸி நிதானமாக விளையாடி அதே சமயம் விக்கெட்டுகளையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது, மிட்செல் ஸ்டார்க் (58*) மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் (17) இடையேயான 59 ரன்கள் கடைசி விக்கெட் கூட்டணி மூலம் 281 ரன்கள் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா (5 விக்கெட்டுகள்) மற்றும் லுங்கி நிகிடி (3 விக்கெட்டுகள்) பந்துவீச்சில் அசத்தினர்.

மேலும், இப்போது, லார்ட்ஸில் நான்காவது மிக உயர்ந்த வெற்றிகரமான ரன் துரத்தலை (282) தென்னாப்பிரிக்கா முடித்தால், 1998-க்குப் பிறகு முதல் ICC கோப்பையை வெல்வார்கள். ஆனால், பிட்ச் இன்னும் பவுன்ஸ் மற்றும் சீம் கொடுக்கிறது, எனவே ஆக்ரோஷமான பேட்டிங் தேவை. இந்த இலக்கும் சற்று சவாலாக தான் இருக்கும். எனவே, என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.