Payload Logo
கிரிக்கெட்

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

Author

bala

Date Published

Rishabh Pant records

லீட்ஸ் :இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன் 20, 2025, லீட்ஸ்) அபாரமாக விளையாடி, உலகளவில் அரிய சாதனை படைத்தார். அது என்ன சாதனை என்றால், ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த உலகின் இரண்டாவது விக்கெட் கீப்பராக அவர் பதிவானார். இதற்கு முன், 2001இல் ஜிம்பாப்வேயின் ஆண்டி ஃபிளவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 142 மற்றும் 199 ரன்கள் எடுத்து இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

இப்போது, ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் குவித்து, 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை மீண்டும் நிகழ்த்தியுள்ளார். ரிஷப் பண்டின் இந்த சாதனை, அவரது ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் அழுத்தமான சூழல்களில் பொறுப்புடன் ஆடும் திறனை உலகுக்கு காட்டியது.

விக்கெட் கீப்பராக இருந்து கொண்டு இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடிப்பது மிகவும் அரிதான சாதனையாகும். இதனால், அவர் உலகின் தலைசிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர்களில் ஒருவராக பாராட்டப்படுகிறார். சமூக வலைதளங்களில்#RishabhPantஎன்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் இந்த சாதனையைக் கொண்டாடி வருகின்றனர். சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் வலுவான நிலையில் உள்ளது. பந்தின் இந்த வரலாற்று சாதனை, இந்திய கிரிக்கெட்டின் இளம் தலைமுறையின் ஆற்றலையும், எதிர்கால வெற்றிகளுக்கான வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது.

ஏற்கனவே, நேற்று முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியே சாதனையை படைத்திருந்தார். அது என்ன சாதனை என்றால்,  SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக அதிக ரன்கள் (1,746 ரன்கள், 27 போட்டிகள், 38.80 சராசரி) குவித்தவர் என்ற முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார்.அந்த சாதனையை தொடர்ந்து இன்றும் புதிய சாதனையை படைத்துள்ளார்.