ஐசிசி மகளிர் உலக கோப்பை - அட்டவணை வெளியீடு.!
Author
gowtham
Date Published

பெங்களூர் :இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த உலகளாவிய போட்டி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் நவமபர் 2 வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதன் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையின் ஐந்து நகரங்களில் நடைபெறும், இதில் பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி, குவஹாத்தியில் உள்ள ஏசிஏ மைதானம், இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ மைதானம் மற்றும் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானம் ஆகியவை அடங்கும்.
மகளிர் உலககோப்பை இந்தியாவில் 4 மைதானங்களிலும் இலங்கையில் கொழும்பு மைதானத்திலும் நடைபெறுகிறது. மகளிர் உலககோப்பை இறுதிப்போட்டி நவம்பர் 2ம் தேதி பெங்களூரு மைதானத்தில் நடைபெறும். செப்.30 பெங்களூருவில் நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளது.