Payload Logo
கிரிக்கெட்

தோனியை கௌரவித்த ஐசிசி.! 'வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்' - மனமுருகிய தோனி

Author

gowtham

Date Published

Dhoni icc hall of fame

டெல்லி :கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக கௌரவிக்கப்படும் ஐசிசி-ன் 'Hall of Fame' பட்டியலில் எம்.எஸ் தோனி இடம்பெற்றார். நேற்றைய தினம் லண்டனில் நடந்த விழாவில், இந்திய உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எம்எஸ் தோனி ICC ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். இப்பொழுது, Hall of Fame- இடம்பெற்ற தோனிக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது.

டி20 உலக கோப்பை, ODI உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற அவரின் சிறந்த கேப்டன்சி தருணங்களுடன், முன்னாள் வீரர்கள் அவரை குறித்து சிலாகித்து பேசுவதும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட 11வது இந்திய வீரர் தோனி ஆவார்.

அவருக்கு முன், நீது டேவிட், வீரேந்தர் சேவாக், டயான் எடுல்ஜி, வினோத் மங்கட், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, கபில் தேவ், பிஷன் சிங் பேடி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

unknown node

ஐ.சி.சி அதன் ஹால் ஆஃப் ஃபேம் 2025 இல் ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஏழு கிரிக்கெட் வீரர்களை சேர்த்துள்ளது. ஆம், தோனியைத் தவிர, தென்னாப்பிரிக்க முன்னாள் பேட்ஸ்மேன் ஹாஷிம் ஆம்லா, ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், நியூசிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, பாகிஸ்தான் மகளிர் அணி வீராங்கனை சனா மிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை சாரா டெய்லர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட்டின் மிகவும் மதிப்பு மிக்க இந்த பட்டியலில் இடம் பெற்றதற்கு தோனி நன்றி தெரிவித்தார். "தலைமுறைகள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் பெயரிடப்பட்டது ஒரு மரியாதை. எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரையும் நினைவில் கொள்வது ஒரு அற்புதமான உணர்வு. வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன், அதை நான் என்றென்றும் போற்றுவேன்," என்று அவர் நெகிழ்ச்சி தெரிவித்தார்.கேப்டன் கூல் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸில் 'தல' என்று அழைக்கப்படும் தோனி, இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். தோனி, 2007ல் டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களுக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி மூன்று ஐசிசி பட்டங்களை வென்ற ஒரே கேப்டன் தோனி ஆவார். இது தவிர, அவரது தலைமையில், இந்தியா 2010, 2016 ஆம் ஆண்டுகளில் ஆசியக் கோப்பை பட்டத்தையும் வென்றது.