Payload Logo
உலகம்

சபாஷ் சரியான போட்டி : தோற்கடித்த 'ஐ ஷோ ஸ்பீடு' ! டென்ஷனில் டிவியை உடைத்த ஆஷ்டன் ஹால்!

Author

bala

Date Published

Ashton Hall vs IShowSpeed

அமெரிக்கா :ரியாக்சன் கொடுப்பதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான யூடுயூபர்களில் ஒருவர் 'ஐ ஷோ ஸ்பீடு'. இவர் ரன்னிங் ரேஸிலும் சிறப்பாக ஓடக்கூடிய ஒருவர் என்பது அவரை பின்தொடர்ப்போருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இவரை யூடியூப்பில் மட்டும் 40 மில்லியனிற்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இவரை போலவே காலையில் சீக்கிரம் எழுந்து ஐஸ் வாட்டரில் முகம் கழுவும் வீடியோ, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர்Ashton Hall(ஆஷ்டன் ஹால்).

இவருக்கும் யூடியூப்பில்  3 மில்லியனிற்கும் அதிகமான பின் தொடர்போர் எண்ணிக்கை உள்ளது. இருவரும் யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் நிலையில் இருவரும் சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வாக்குவாதம் இருவருக்கும் இடையே ரன்னிங் ரேஸ்ஸிற்கு செல்லும் அளவுக்கு சென்றுள்ளது. இருவரும் பேசி முடிவெடுத்து இருவருக்கும் இடையே ரன்னிங் ரேஸ் பந்தயம் வைத்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.

எனவே, 4 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு இருவருக்கும் இடையே போட்டி நடைபெற்றது.  புல் தடத்தில் நடந்த முதல் இரண்டு பந்தயங்களில் ஐ ஷோ ஸ்பீட் எளிதாக வென்றார். 29 வயதான ஆஷ்டன், தோல்வியை ஏற்காமல், மூன்றாவது சுற்றில் தான் வெற்றிபெறவேண்டும் என முடிவெடுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், 20 வயதான ஐஷோஸ்பீட் மீண்டும் வெற்றி பெற்றார். நான்காவது மற்றும் இறுதிப் பந்தயத்திலும் ஐ ஷோஸ் பீட் முன்னிலை வகித்து, ஆஷ்டனை முற்றிலும் தோற்கடித்தார் .

ஒவ்வொரு தோல்வியிலும் ஆஷ்டன் ஹால் விரக்தியடைந்தார். மூன்றாவது பந்தயத்திற்குப் பிறகு ஐஷோஸ்பீட் நடந்து செல்ல முயன்றபோது, ஆஷ்டன் ஏன் வெளியேறுகிறாய் என்று கேட்டார். அதற்கு ஐஷோஸ்பீட், "நான் உன்னை மூன்று முறை வென்றுவிட்டேன்" என்று பதிலளித்தார். அவர் ஆஷ்டனை"Ashton Fraud"என்று கிண்டலாக அழைத்தார்.

இறுதியாக, நான்காவது பந்தயத்தில் தோற்ற பிறகு, ஆஷ்டன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, "நான் நியாயமாக தோற்றுவிட்டேன்" என்று கூறினார். இந்தப் பந்தயத்தின் நேரலை யூடியூபில் 300,000 பார்வையாளர்களை ஈர்த்தது. தோல்விக்கு பிறகு மிகவும் கடுப்பான  ஆஷ்டன் ஹால்  வீட்டிற்கு சென்று ரன்னிங் ரேஸ் வீடியோவை போட்டு பார்த்தார். அப்போது தோல்வி அடைந்தபோது கையில் வைத்திருந்த பந்தை வைத்து டீவியை நோக்கி ஓங்கி வீசினார். இதனால் அந்த டிவி உடைந்தது.

டிவியை உடைத்த பிறகு பாருக்கு சென்று ஜில் செய்துவிட்டு மீண்டும் 3 மணிக்கு பிறகு காலையில் அலரம் செட் செய்துவிட்டு தன்னுடைய வேலையை பார்க்க தொடங்கினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த அவருடைய பின் தொடர்வோர்கள்(subscribers)நீங்கள் மீண்டும்  'ஐ ஷோ ஸ்பீடுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்.